காரின் முன்னாள் நின்று வாக்குவாத‌ம் செய்த நபர் - முன்னாள் நின்ற நபரை தூக்கி கொண்டு பாய்ந்த கார்

காரின் முன்னாள் தொங்கியபடி 1 கி.மீ தூரம் பயணித்த நபர்
காரின் முன்னாள் நின்று வாக்குவாத‌ம் செய்த நபர் - முன்னாள் நின்ற நபரை தூக்கி கொண்டு பாய்ந்த கார்
x
உத்தரகாண்ட் மாநிலம் கஸியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், ஒருவர் காரின் முன்பகுதியில் தொங்கியபடி 1 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச்செல்லப்பட்டுள்ளார். சாலை நடுவே ஏற்பட்ட வாக்குவாத‌த்தால், காரை இடைமறித்து ஒருவர் வாக்குவாதம் செய்த‌தாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுனர், அவர் மீது மோத முயற்சித்துள்ளார். இதனை சுதாரித்துகொண்ட நபர், காரின் முன்பகுதியில் பிடித்து கொண்டபடி தொங்கியுள்ளார். அதனை பொருட்படுத்தாத கார் ஓட்டுனர் 1 கிலோ மீட்டர் தூரம் அவரை தூக்கி சென்றுள்ளார். இதனை சக வாகன ஓட்டிகள், வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்