ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் அலுவலகங்களுக்கு சீல்

ஜம்மு காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் அலுவலகங்களுக்கு சீல்
x
ஜம்மு காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அந்த இயக்கத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இயக்கத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். எனினும் பறிமுதல் செய்யப்பட்டவை மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான முழு விபரத்தை அரசு அதிகாரப்பூர்வமாக இன்னமும் வெளியிட வில்லை. இதனிடையே ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெஹ்பூபா முக்தி தலைமையில் ஜனநாயக மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்