பாதுகாப்பில் இந்தியாவின் பலம் என்ன?

பாகிஸ்தான் நிலப்பரப்பின் 87 சதவீத நிலப்பரப்பை துல்லியமாக படம் பிடிக்கும் தொழில்நுட்பம் இஸ்ரோவிடம் உள்ளது.
பாதுகாப்பில் இந்தியாவின் பலம் என்ன?
x
இந்தியாவின் 100 -வது செயற்கைகோளான கார்ட்டோ சாட் -2 செயற்கைகோள் கடந்து ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த வகை செயற்கைகோள் பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது ஆகும். இதேபோல் இஸ்ரோவால் ஏவப்பட்ட பல செயற்கைகோள்கள் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் உதவி புரிந்து வருகிறது. இஸ்ரோவின் அதிநவீன செயற்கைகோள்கள் பாகிஸ்தானின் 87 சதவீத நிலப்பரப்பை ஹெச்டி தொழில் நுட்பத்தில் மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.

இந்த வகை செயற்கைகோள்கள் பாகிஸ்தானின் மொத்தமுள்ள 8 புள்ளி 8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில், 7 புள்ளி 7 லட்சம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை படம் பிடிக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் எல்லை பாதுகாப்பு நடவடிக்கையில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான்  வீடுகளில் உள்ள அறைகளை கூட துல்லியமாக கண்காணிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

இதேபோல் பாதுகாப்பு நடவடிக்கைக்கான செயற்கைகோள்  தேவைகளில் 70 % தேவைகளை இஸ்ரோ பூர்த்தி செய்து விட்டதாக விமான படையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்