வருத்தமும், கோபமும் இருக்கும் நேரத்தில் சீனா வந்துள்ளேன் - சுஷ்மா

சீனாவில் நடைபெறும் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சவராஜ் கலந்து கொண்டுள்ளார்.
வருத்தமும், கோபமும் இருக்கும் நேரத்தில் சீனா வந்துள்ளேன் - சுஷ்மா
x
சீனாவில் நடைபெறும் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சவராஜ் கலந்து கொண்டுள்ளார். மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் தீவிரவாதம்,  உலகளாவிய பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து  விவாதிக்கப்படுகிறது. இதில் பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியாவில் வருத்தமும், கோபமும் இருக்கும் நேரத்தில் தற்போது தான் சீனா வந்திருப்பதாகக் கூறினார். தீவிரவாதத்துக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இதுபோன்ற தாக்குதல் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்