உயர்மட்ட குழுவினருடன் பஞ்சாப் முதல்வர் ஆலோசனை

எல்லைப் பகுதியில் நாளை ஆய்வு செய்வதாக தகவல்
உயர்மட்ட குழுவினருடன் பஞ்சாப் முதல்வர் ஆலோசனை
x
விமானப்படை தாக்குதலைத் தொடர்ந்து, எல்லைப்பகுதி மாநிலமான பஞ்சாபில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லைப் பகுதிக்கு நாளை சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தங்கள் மாநிலம் எதற்கும் தயாராக உள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சரிடம் தான் தெரிவித்துள்ளதாகவும் அமரீந்தர் சிங் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்