4 அவசர சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
4 அவசர சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி
x
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதி நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தப்படாத வைப்பு நிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவை அனைத்தும்  மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியானது குறிப்பிடத்தக்கது. புதிய மின்னணு கொள்கை உருவாக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்