உலகளவில் 61% பேருக்கு முறையான வேலையில்லை - சர்வதேச தொழிலாளர் அமைப்பு

உலகளவில் வேலையின் தரம் குறைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் 61% பேருக்கு முறையான வேலையில்லை - சர்வதேச தொழிலாளர் அமைப்பு
x
உலகளவில் வேலையின் தரம் குறைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகளவில் 61 சதவீத பேர் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலையின்றி, குறைந்த சம்பளம் மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் பணி செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டிற்குள் "அனைவருக்கும் தகுதியான வேலை" என்று ஐக்கிய நாடுகள் சபையில், உலக நாடுகள் சார்பில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கு சாத்தியமற்றதாகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. வேலை வழங்குவதில் பாலின இடைவெளியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்