அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் : பிப்ரவரி 15 முதல் விண்ணப்பிக்கலாம்

அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத் திட்டத்துக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது...
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்  : பிப்ரவரி 15 முதல் விண்ணப்பிக்கலாம்
x
நிதியமைச்சர் பியூஷ் கோயல் தனது பட்ஜெட் உரையில், அமைப்பு சாரா  தொழிலாளர்களுக்கு ' பிரதம மந்திரி ஷரம் யோகி மந்தன் ' என்கிற பெயரில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார்.  40  வயதுக்குள் இதில் இணையும் பயனாளிகளின் 60  வயதுக்கு பின்னர் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும்,  அவர்கள் மாதந்தோறும் 55 ரூபாய் பங்களிப்பாக செலுத்தினால், அதே அளவு பங்களிப்புத் தொகையை அரசு செலுத்தும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்வோர், சாலையோர வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளிகள், துப்புறவுப் பணியாளர்கள், கட்டுமான மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் போன்ற அமைப்பு சாரா  தொழிலாளர்கள் இதன் கீழ் பலன் பெறலாம். எனினும் மத்திய மாநில அரசின்  இதர ஓய்வூதியத் திட்டங்களில் உள்ளவர்கள் இதில் பயனடைய  முடியாது என்றும் அறிவிக்கப்படுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்