தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் : லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு

லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் : லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு
x
லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என  லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.  அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின்  ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் சட்டத்தின் மூலம் தனி அமைப்பு 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சானா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8 பேர் கொண்ட குழு கடந்த ஆண்டில் அமைக்கப்பட்ட நிலையில் புதிய லோக்பால் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்.   இந்த நிலையில் லோக்பால் கமிட்டிக்கு  விண்ணப்பங்களை வரவேற்பதாக தேர்வுக் குழு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்