வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்

தகவல் தொடர்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-31' செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிசாட்-31 செயற்கைக்கோள்
x
தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் - 31 என்ற 40-வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இதன்படி பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் தகவல் பரிமாற்றம், பெருங்கடல் ஆய்வு குறித்த தகவல்களை அளிக்கும். தொலை  தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். தகவல் தொடர்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-31' செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து  விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்