புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ-க்கள் அண்ணா சிலைக்கு மரியாதை
பதிவு : பிப்ரவரி 03, 2019, 12:17 PM
அண்ணா நினைவு தினம், புதுச்சேரியில் அரசு சார்பாக அனுசரிக்கப்பட்டது.
அண்ணா நினைவு தினம், புதுச்சேரியில் அரசு சார்பாக அனுசரிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுபோல, புதுச்சேரி திமுக எம்எல்ஏ சிவா தலைமையில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பாக மாநில செயலாளர் புருஷோத்தமன், அதிமுக எம்எல்ஏ-க்கள் அன்பழகன், பாஸ்கர் , வையாபுரி மணிகண்டன் மற்றும் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். மேலும், அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.