இந்து கோவிலில் சாமி உருவப்படங்கள் மீது கருப்பு மை

மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
இந்து கோவிலில் சாமி உருவப்படங்கள் மீது கருப்பு மை
x
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள நாராயணர் கோவிலில் சாமி உருவப்படங்கள் மீது கருப்பு மையை பூசி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். அங்குள்ள லூயிஸ்வில்லி நகரில் சுவாமிநாராயணர் கோவிலுக்கு உள்ளே சென்ற சில மர்ம நபர்கள், சாமி உருவப்படங்கள் மீது கருப்பு பெயிண்டை அடித்து சென்றதுடன், சுவற்றில் தவறான வார்த்தைகளை எழுதி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, நாற்காலியில் கத்தியை செருகி வைத்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அங்கு வாழும் இந்துமத மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்