ராமர் கோவிலுக்கு பிப்.21-ல் அடிக்கல் - சொரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் தகவல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி அடிக்கல் நாட்ட துறவிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமர் கோவிலுக்கு பிப்.21-ல் அடிக்கல் - சொரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் தகவல்
x
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் நடைபெற்ற துறவிகள் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுமான பணிகள் முடியும் வரை அங்கேயே தங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்ரிநாத் மடத்தின் சங்கராச்சாரியார் சொரூபானாந்த சரஸ்வதி சுவாமிகள்,
நீதிமன்ற உத்தரவை மீறி எந்த நடவடிக்கையும் தாங்கள் எடுக்கவில்லை என்று  விளக்கம் அளித்தார்  அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை, உச்சநீதிமன்றம் ரத்து செய்யாதவரை தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்