அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் : லோக்பால் அமைக்க வலியுறுத்தி போராட்டம்

லோக்பால் அமைக்க வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் : லோக்பால் அமைக்க வலியுறுத்தி போராட்டம்
x
அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பை அமைக்க வலியுறுத்தி, காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறார். இதனிடையே, லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக, ஒரு தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்தது. அதன் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்நிலையில், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தினை அன்னா ஹசாரே  இன்று மீண்டும் தொடங்கி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்