அயோத்தியில் சர்ச்சைக்கு உட்படாத 42 ஏக்கர் நிலம் : விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர அதைச் சுற்றி உள்ள 42 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்கு உட்படாத 42 ஏக்கர் நிலம் : விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
x
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் விரைந்து தீர்ப்பு வழங்க தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அங்கு மீண்டும் ராமர் கோவில் கட்டுவதில் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த வழக்கில்,  சர்ச்சைக்குரிய 0.3 ஏக்கர் நிலத்தை தவிர, அதைச் சுற்றி உள்ள 42 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த நிலம் விடுவிக்கப்படும் பட்சத்தில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்