இளம்பெண்ணை காரில் கடத்திய இளைஞர்கள் : வெளியான காட்சிகள்
பஞ்சாப் மாநிலம் முக்த்சர் நகரில் இளம்பெண்ணை இளைஞர்கள் காரில் கடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் மாநிலம் முக்த்சர் நகரில் இளம்பெண்ணை இளைஞர்கள் காரில் கடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. ஃபசில்கா மாவட்டம், ஷாக் பலிவாலா கிராமத்தை சேர்ந்த இளம்பெண், வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில் அழகு நிலையத்திற்கு சென்றிருந்தார். அதனருகே காத்திருந்த இளைஞர்கள் சிலர், அந்த இளம்பெண்ணை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அந்த பெண் தப்பித்து ஓட முயன்றபோதும் அவர்கள் தூக்கிச் சென்று காரில் கடத்தி சென்றனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் விசாரணை நடத்திய போலீசார், இளைஞர்களை கைது செய்தனர்.
Next Story