"வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

"முப்படைகளிலும் பெண்கள் முத்திரை பதித்து வருகின்றனர்"
வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
x
கல்வி, கலை, மருத்துவம், விளையாட்டு தவிர தற்போது முப்படைகளிலும் நம் பெண் பிள்ளைகள் முத்திரை பதித்து வருவதாகவும், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் விருதுகளை வாங்கி குவிப்பதில், ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் முந்தியிருப்பது மகிழ்ச்சி தருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். நாட்டின் 70-வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த குடியரசு தினம்,  சுதந்திரம், அனைவரும் சமம் மற்றும் சகோதரத்துவத்தை நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் நினைவு கூறுவதற்கு ஒரு வாய்ப்பை அளிப்பதாக தெரிவித்தார்.  இந்தாண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது என்றும்,  குடியுரிமை பெற்ற அனைவரும், வரும் மக்களவைத் தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை செயலாக்க வேண்டும் என்றும், நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்