கடல் மட்டத்தில் இருந்து 750 அடி உயரத்தில் பருந்து சிலை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம்

கேரளாவில் மிக பிரமாண்டமான பருந்து சிலையுடன் கூடிய சுற்றுலா தலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 750 அடி உயரத்தில் பருந்து சிலை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம்
x

கொல்லம் மாவட்டம் சடயமங்கலம் பகுதியில் உள்ள ஜடாயு பாறையில்,  கடல் மட்டத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் இந்த சிலையை அமைக்கப்பட்டுள்ளது. ராமாயண காலத்தில் சீதையை ராவணன் சிறைப்பிடித்து சென்றபோது, ஜடாயு என்னும் பருந்து தடுத்ததாகவும், கோபத்தில் அதன் இறக்கையை ராவணன் வெட்டியபோது, இந்த பாறையில் விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. இந்த ஜடாயு பாறையின் மீது தான், 250 அடி நீளம், 150 அகலம், 75 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான பருந்து சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஜடாயு பாறையை சுற்றிப் பார்க்க, ரோப் கார், ஹெலிகாப்டர் என சகல வசதிகளையும் கேரள அரசு செய்துள்ளதால், கடவுளின் தேசம், மேலும் மெருகேறி இருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்