நெல்லூர் : ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 6.38 கோடி பணம் பறிமுதல்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 6 கோடியே 38 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லூர் : ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 6.38 கோடி பணம் பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 6 கோடியே 38 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தடா தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சென்னையை நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை செய்ததில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது. காரில் இருந்தவர்களை விசாரித்தபோது, தெலங்கானா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நர்சா புரத்தைச்  சேர்ந்த மகேஷ் மற்றும் ஹரிபாபு என தெரிய வந்தது. பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்