"பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு" - சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு - சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
x
சமூக ரீதியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி தலைமையிலான
மத்திய பாஜக அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து இந்த சட்ட திருத்த மசோதா மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லட் மசோதாவை தாக்கல் செய்தார். 

இதனையடுத்து 4 மணி நேரத்திற்கும் மேல் உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு  மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் நாளை இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்