கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், 'லிங்கா' பட தயாரிப்பாளரின் வீடுகளில் ஐ.டி. ரெய்டு

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், லிங்கா பட தயாரிப்பாளரின் வீடுகளில் ஐ.டி. ரெய்டு
x
வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து, பெங்களூரு சதாசிவ நகர் பகுதியில் வசிக்கும் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல, தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தின் தயாரிப்பாளர், ராக்லைன் வெங்கடேஷின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. 60 இடங்களில் அதிகாலை ஆறு மணிக்கு தொடங்கிய சோதனை தற்போது வரை நீடிக்கிறது. இந்த அதிரடி சோதனையில் 300 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்