அலகாபாத் நகரின் பெயர் இனிமேல் 'பிரயாக்ராஜ்'

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் பெயரை, பிரயாக்ராஜ் என மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அலகாபாத் நகரின் பெயர் இனிமேல் பிரயாக்ராஜ்
x
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் பெயரை, பிரயாக்ராஜ் என மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலக புகழ் பெற்ற 'கும்பமேளா' திருவிழா, வருகிற 15ம் தேதியன்று தொடங்க உள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு அளித்த பெயர் மாற்ற பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுபோல, இந்தியா முழுவதும் 25 நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற, 10 நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எனினும், மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை 'பெங்கால்' என மாற்றுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கவில்லை. அந்த பரிந்துரை, வெளியுறவு அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்