"எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும்" - மோடி அறிவுரை

எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும் - மோடி அறிவுரை
x
எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மான்கி பாத்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றிய அவர், ஆசிய போட்டிகளில் அதிக பதங்கங்கள் வென்ற வீரர் வீராங்கணைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். சைக்கிளில்  உலகினை சுற்று சாதனை படைத்த பூனே பெண் வேதாங்கியை பிரதமர் பாராட்டினார். பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு, விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், வறுமையில் இருந்து அதிகளவில் இந்தியர்கள் மீண்டு வருவதாக உலக நிறுவனங்கள் வெளியிட்ட செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மன் கி பாத் உரையில், சென்னையை சேர்ந்த மறைந்த 5 ரூபாய் மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரனுக்கு மோடி புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்