மேகாலயா சுரங்கத்தில் 18 வது நாளாக தொடரும் மீட்பு பணி

மேகாலயா மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 15 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேகாலயா சுரங்கத்தில் 18 வது நாளாக தொடரும் மீட்பு பணி
x
மேகாலயா மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 15 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டம் லும்தாரி கிராமத்தில் இயங்கி வரும் சுரங்கத்தின் அருகே உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், சுரங்கத்தில் பணியாற்றி வந்த 15 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கடந்த 13 ஆம் தேதி ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சக்திவாய்ந்த இழுவை திறன்கள் கொண்ட  மோட்டார்கள் கொண்டு பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், 18 வது நாளாக தொடரும் இந்த மீட்பு பணியில் தற்போது இந்திய கடற்படையினரும்  இணைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்