ஆயிரக்கணக்கான பிரசவங்களை கையாண்ட நரசம்மா - 77 ஆண்டுகளாக இலவச பிரசவ சேவை

தனியொரு மனுஷியாக ஆயிரக்கணக்கான சுகப் பிரசவங்களுக்கு காரணமான நரசம்மா மறைந்து விட்டார். அவரது வாழ்க்கை பயணத்தை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு.
ஆயிரக்கணக்கான பிரசவங்களை கையாண்ட நரசம்மா - 77 ஆண்டுகளாக இலவச பிரசவ சேவை
x
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபுராவில் வசித்து வந்த நரசம்மாவிற்கு 12 குழந்தைகள், 22 பேரக் குழந்தைகள் உள்ளனர். இதுவரை இவர், தனி ஒருவராக ஆயிரக்கணக்கான சுகப் பிரசவங்களை கையாண்டுள்ளார்.

இவர், அப்பகுதி மக்களால், சுலகிட்டி நரசம்மா என்றழைக்கப்படுகிறார். கன்னடத்தில் சுலகிட்டி என்றால் மகப்பேறு என்று அர்த்தம். இவர், தமது கிராமப் பெண்களுக்கு மட்டுமின்றி, சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ள பெண்களுக்கும் பிரசவம் பார்த்து வந்தார். இவரது பாட்டி மரிகெம்மாவிடம் தான், நரசம்மா பிரசவம் பார்க்கும் பயிற்சி பெற்றுள்ளார். நரசம்மாவின் முதல் ஐந்து பிரசவங்களைப் பார்த்தவர் அவரது பாட்டி தான். 

இவரது பாதுகாப்பான மகப்பேறு மருத்துவம் வெளி உலகுக்கு எதிர்பாராத விதமாகத்தான் தெரிய வந்தது. சுமார் 77 ஆண்டுகளாக, எந்தவித பிரதிபலனும் பார்க்காமல், இலவச பிரசவ சேவையாற்றி வரும் நரசம்மா, 2007ம் ஆண்டு வாக்கில் தான் பிரபலமானார். அப்போது தான், இவரது தன்னலமற்ற சேவை, ஊடக வெளிச்சத்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது.
 
இதனை தொடர்ந்து, 2012-ஆம் ஆண்டு கர்நாடக அரசு "தேவராஜ் அர்ஸ்' விருதையும், தொடர்ந்து "கித்தூர் ராணி சென்னம்மா' விருதையும் வழங்கியது. மத்திய அரசும் "வயோஸ்ரேஸ்டா சம்மனா'' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது. 2014-ஆம் ஆண்டு தும்கூர் பல்கலைக்கழகம் சுலகிட்டி நரசம்மாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இந்த வரிசையில், 2018ம் ஆண்டுக்குரிய மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, நரசம்மாவிற்கு கிடைத்துள்ளது. இவர், தமது 20-வது வயதில் தற்செயலாகப் பிரசவம் பார்ப்பவராக மாறினார். அந்தச் சம்பவம், அவருக்குப் பின்னாளில், ''பத்மஸ்ரீ'' விருதுக்கான விதையாக இருக்கப் போகிறது என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்.மருத்துவ வசதி பெருகி விட்டாலும், இன்றளவும், பலரும் நரசம்மாவைத் தேடி வந்து கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான தாயையும், சேயையும் நலமுடன் பிரித்தெடுத்த, இந்த தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். 

Next Story

மேலும் செய்திகள்