"போஸ்" என்று பெயர் மாற்றப்படும் அந்தமான் "ரோஸ்" தீவு

அந்தமானில் உள்ள "ரோஸ்" என்ற தீவுக்கு விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் நினைவாக "போஸ்" என பெயர் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
போஸ் என்று பெயர் மாற்றப்படும் அந்தமான் ரோஸ் தீவு
x
அந்தமானில் உள்ள "ரோஸ்" என்ற தீவுக்கு விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் நினைவாக "போஸ்" என பெயர் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி அந்தமானில் உள்ள பிளையர் துறைமுகத்தை பார்வையிட இருக்கும் பிரதமர் மோடி இதனை அறிவிப்பார் என்று தெரியவந்துள்ளது. இரண்டாம் உலக போரின் போது அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுபாஷ் சந்திர போஸ், பிளையர் துறைமுகத்தில் இந்திய தேசிய கோடியை ஏற்றினார். அதன் 75 வது நினைவு ஆண்டை முன்னிட்டு , அவரின் வேண்டுகோள் படி, நீல் தீவுக்கு சாஹித் தீப் என்றும், ஹெவ்லொக் தீவுக்கு சுவராஜ் தீப் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்