முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக சிறப்பு 100 ரூபாய் நாணயம் வெளியீடு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக சிறப்பு 100 ரூபாய் நாணயம் வெளியீடு
x
முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது நினைவைப் போற்றும் விதமாக இந்த சிறப்பு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் சுமிதா மஹாஜன், நிதியமைச்சர் அருண்ஜேட்லி,  கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, பாஜக தேசியத் தலைவர்  அமித் ஷா, அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,  அடல்பிஹாரி வாஜ்பாயின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்