இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
x
ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன், வணிகவரித் துறை தலைமைச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரியினால் 2017 ஜூலை மாதத்திலிருந்து 2018 செப்டம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையான, மூன்றாயிரத்து 230 கோடி ரூபாயினை மத்திய அரசு அளிக்க வேண்டும், ஐந்தாயிரத்து 454 கோடி ரூபாய் நிலுவைத் தொகையினை உடனடியாக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக வர்த்தகர்கள் முன்வைத்துள்ள சில வரிக் குறைப்பு கோரிக்கைகளும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்