ஒரே நாளில் 3 பேர் கொலை - பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரியில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 3 பேர் கொலை - பொதுமக்கள் அச்சம்
x
வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கமல், நேற்று காலை வெளியே சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கமல், அருகில் இருந்த பாட்டிலை உடைத்து ஸ்ரீதர் கழுத்தில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதே போல், ரியல் எஸ்டேட் தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சென்ற ஐயப்பனை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்