புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே மீண்டும் மோதல் : இருவரின் முரணான உத்தரவால் குழப்பத்தில் போலீசார்...

புதுச்சேரியில் ஆளுநர் உத்தரவை பின்பற்றுவதா அல்லது முதலமைச்சரின் உத்தரவை செயல்படுத்துவதா என அம்மாநில போக்குவரத்து போலீசார் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே மீண்டும் மோதல் : இருவரின் முரணான உத்தரவால் குழப்பத்தில் போலீசார்...
x
ஆளுநர் கிரண் பேடியின் உத்தரவின் பேரில் கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீஸார் ஸ்பாட் பைன் விதித்து வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி உடனடி அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.  இதனிடையே போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு கிரண்பேடி அனுப்பியுள்ள நினைவூட்டல் கடித்தத்தில் தமது உத்தரவுக்கு முரணான உத்தரவுகள் எதுவும் செல்லாது என குறிப்பிட்டுள்ளதால், போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்