அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு : கிறிஸ்டியன் ​மிசைலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

இந்திய தலைவர்கள் பயன்பாட்டுக்காக 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அரசின் உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு : கிறிஸ்டியன் ​மிசைலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
x
இந்திய தலைவர்கள் பயன்பாட்டுக்காக 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அரசின் உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் முக்கிய இடைத் தரகராக கருதப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மிசைல் துபாயில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்டார். சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் மதியம் ஆஜர்படுத்தப்பட்ட, அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அனுமதி கோரியது. இதனைத் தொடர்ந்து அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்