ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு : கொள்ளையன் மொகர்சிங் கிராமத்தில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு

ரயில் கொள்ளையன் மொஹர் சிங்கின் சொந்த கிராமத்தில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு : கொள்ளையன் மொகர்சிங் கிராமத்தில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு
x
சேலம் - சென்னை ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்ச ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மொஹர்சிங் என்ற கொள்ளையன் மற்றும் அவனது கும்பலை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மொகர் சிங் உள்ளிட்ட 7 பேர், தற்போது புழல் சிறையில் உள்ளனர். இந்நிலையில், மற்றொரு கொள்ளை வழக்கு தொடர்பாக, மொகர்சிங்கின் சொந்த கிராமத்துக்கு, மத்திய பிரதேச மாநில போலீசார் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

அதில், அம்மாநில தலைமை காவலர் ஒருவர் காயமடைந்து, குணா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக போலீசார் என நினைத்து சுட்டதாக, பிடிபட்ட குற்றவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், ரயில் கொள்ளை வழக்கு தொடர்பாக,  குணா மாவட்டத்தில் முகாமிட்டுள்ள தமிழக சிபிசிஐடி தனிப்படை போலீசாரின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. ஏற்கனவே, நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றபோது, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்