சருகுமான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? : வேட்டையாடுதலால் அழிந்துவரும் அரிய உயிரினம்
பதிவு : டிசம்பர் 02, 2018, 10:52 AM
சருகுமான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? வேட்டையாடுதலால் அழிவின் விளிம்பில் இருக்கும் இவை பற்றிய ஒரு தொகுப்பு...
சருகுமான் என்கிற பெயரைக் கேட்டவுடனேயே அது என்ன மான் ? என்று உங்களில் பலர் கேட்கக் கூடும். ஆனால் அது ஒருவகை மான் கிடையாது. அறிவியல் ரீதியில் மான் இன வகைப்பாட்டில் சேராத சிறிய குளம்பி விலங்குதான் இந்த சருகுமான்.

சருகு என்பதன் பொருள் இரட்டைக்குளம்பி என்பதாகும். அதிலும் இவை மான்போன்றே உருவத்தில் தோற்றமளிப்பதால் இதை சருகுமான் என்று கூறுகிறார்கள். மரம்,செடி, கொடிகளிடையே இலை தழைகளுடன் ஒன்றிக் காய்ந்த சருகுகளுக்கு இடையில் இது வாழும். அதன் தோற்றமும் சருகுகள் போன்றே இருப்பதால் இதன் பெயர் சருகுமான் என்றானதாகக் கூறுகிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள்.

இன்னும் சிலரோ, இதன் ஆங்கிலப் பெயரான Mouse deer என்பதனை அப்படியே மொழிப்பெயர்த்து எலிமான் என்றும் அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பொய்மான், மாயமான் என்பது இதுதான் எனவும் சொல்கின்றனர். அதாவது இதன் அதீத மறைந்து கொள்ளும் வேகமும், உடனடியாக மனித கண்களுக்கு புலப்படாத திறனும் இதற்கு அந்தப் பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இது ஒரு இரவாடி விலங்கு என்பதால் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே இரை தேடும். பகலில் சருகுமானைக் காண்பது அபூர்வம்தான்.

தமிழகத்தில் திண்டுக்கல் - சிறுமலை மற்றும் கொல்லிமலையின் வனப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சருகுமான்கள் இருக்கின்றன. சிலபகுதிகளில் ஆதிவாசி மக்கள் இதனை கூரன்பன்றி எனவும் அழைக்கிறார்கள். இதுவே சரியான தமிழ்ப் பெயராக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. தெலுங்கில் இதன்பெயர் "ஜரினிபன்டி" அதாவது பன்றியும் மானும் சேர்ந்த கலவை என்பதாகும். மலையாளத்தில் இதன்பெயர் "கூரன்".

இவை உருவத்தில் மிகவும் சிறிய அமைப்பைக் கொண்டவை. இவற்றுக்கு கொம்புகள் இல்லை. சிறிய அளவில் வால் உண்டு. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் சருகுமான்கள், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். இவற்றில் ஆண் சருகுமான்களுக்கு பன்றிகள் போன்ற கோரைப்பற்கள் உண்டு. இவை மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

வேட்டையாடுதல் காரணமாக, வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களுள் சருகுமான்களும் ஒன்று. கடுமையான வனவிலங்குகள் சட்டம் இருப்பினும் இன்றளவும்கூட பரவலாக வேட்டையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த சருகுமானில் இதுவரை சிற்சில வேறுபாடுகளுடன் 10 க்கும் மேற்பட்ட உள்ளினங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கூரன்பன்றி, பொய்மான், மாயமான், எலிமான், உக்கிழான் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

பிற செய்திகள்

இறுதி வரை யாரையும் தாக்காத சின்னத்தம்பி யானை

முகாமிற்கு கொண்டு செல்வதற்காக பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

14 views

சென்னை தாம்பரம் மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து

சென்னை தாம்பரம் மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

112 views

"மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி" - கே.எஸ். அழகிரி

பணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

7 views

"பா.ஜ.க., சசிகலாவுடன் கூட்டணி வைக்க வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி

"பாகிஸ்தான் நான்காக துண்டாடப்பட வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி

46 views

"2 ஆண்டு சாதனையை கொண்டாடும் அதிமுக அரசு" - ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு பயன்பட கூடிய வகையில் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

19 views

"அதிமுக கூட்டணி - ஓரிரு தினங்களில் முடிவு" - பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.