ஆபத்தை ஏற்படுத்தும் ஆச்சரிய "நில்லு நில்லு சவால்" : வாகனங்களை மறித்து கும்பலாக நடனம்
பதிவு : டிசம்பர் 02, 2018, 09:40 AM
கன மழை பாதிப்பில் இருந்து, மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் கேரள மாநிலத்தை, தற்போது புரட்டிப் போட்டு வரும் ஒரு சவால் குறித்து விளக்குகிறது.
இதற்குப் பெயர் தான் "Nillu Nillu challenge..." கேரள மாநில காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த சவால். பொது மக்களும், வாகன ஓட்டிகளும், இதனால் பீதி அடைந்து வருகின்றனர். "ஐஸ் பக்கெட் சேலஞ்ச் - ஃபிட்னஸ் சேலஞ்ச்'' என்று  ஜனரஞ்சகமாக இல்லாமல், சில மாதங்களுக்கு முன்னர், மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ''கிகி சேலஞ்ச்'' இணையத்தில் பிரபலமானது. ஓடும் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடிய படியே முன்னேற வேண்டும் என்ற சவாலுக்கு பலரும் களமிறங்கினர்.

'இந்த நடனத்தால் விபத்து ஏற்படும் என்பதால், யாரும் கிகி சேலஞ்ச்சில் ஈடுபட வேண்டாம்' என காவல்துறையினர் எச்சரித்தனர். அதனையும் மீறி, கிகி சேலஞ்ச் மேற்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்தனர். இந்த நிலையில் தான், கேரளாவில் 'நில்லு நில்லு சேலஞ்ச்' பிரபலமாகி வருகிறது. 

கடந்த 2004-ஆம் ஆண்டு, "Rain Rain Come Again" என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் 'நில்லு நில்லு' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி, 14 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த பாடல் பிரபலமாகி வருகிறது. இப்பாடலுக்கு தான், கேரள மக்கள் 'நில்லு நில்லு சேலஞ்ச்' மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, வாகனத்தில் செல்பவர்களை இடையில் மறிக்கும் நான்கைந்து பேர் கொண்ட கும்பல், அவர்களின் முன்னால் 'நில்லு நில்லு' பாடலுக்கு நடனமாடுகின்றனர். கையில் இலைகள் அல்லது தலையில் ஹெல்மெட்டை அணிந்தபடி அவர்கள் நடனமாடுகின்றனர். தனியாகச் செல்பவர்களையும் விட்டு வைப்பதில்லை...

நடிகர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன், தமது படத்திற்காக மற்றொரு நடிகருடன் இணைந்து இதுபோன்று நடனமாடியிருந்தார். இந்த வீடியோவைத் தொடர்ந்தே இந்த சவால் பிரபலமாகி வருகிறது. இதுபோன்ற விபரீதத்தில் ஈடுபட வேண்டாம் என கேரள காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வீடியோ மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தூய்மை பணிக்காக திரண்ட 'அஷ்ரப்'கள் : வியக்க வைத்த விநோத முயற்சி

கேரளாவில் அஷ்ரஃப் என்ற பெயரை தாங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கோழிக்கோடு கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

302 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

381 views

கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.

485 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1803 views

பிற செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி : தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் - திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆலோசிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

18 views

ராகுல் காந்தியிடம் காங். எம்பி ஜோதிராதித்யா சிந்தியா பேசும் வீடியோ

ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யா சிந்தியா காதில் கிசுகிசுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

140 views

தமிழக சுங்கச் சாவடிகளில் 5 ஆண்டுகளில் ரூ.9,842 கோடி வசூல்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 9 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

50 views

பழமையான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

சென்னையில் கருப்பை வாய் புற்றுநோய் ஆய்வகம்

நாட்டிலேயே முதல்முறையாக கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் மூலக்கூறு ஆய்வகத்தை சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் அறிமுகம் செய்துள்ளது.

15 views

கோழிகள் வளர்ப்பு - தேசிய கருத்தரங்கம்

கோழிகள் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துவதில் உள்ள வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் தொடங்கியது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.