166 பேரை பலி கொண்ட மும்பை தாக்குதல் சம்பவம் : இன்று 10-வது ஆண்டு நினைவு தினம்..

166 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
166 பேரை பலி கொண்ட மும்பை தாக்குதல் சம்பவம் : இன்று 10-வது ஆண்டு நினைவு தினம்..
x
கடந்த 2008 -ஆம் ஆண்டு, இதே நாளில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக மும்பை நகருக்குள், ஊடுருவினர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால், மும்பை நகரமே போர்க்களமாக மாறியது. 

உலக நாடுகளையே உலுக்கிய இந்த அதிபயங்கர தாக்குதலில், அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர்,  பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதிக்கு மரண விதிக்கப்பட்டு, கடந்த 2012-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டான். தாக்குதலில் பலியானவர்களுக்கு, மும்பையில், இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதையொட்டி, மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்