மல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை : எலும்பை முறித்த வீராங்கனை

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை : எலும்பை முறித்த வீராங்கனை
x
நடிகை ராக்கி சாவந்த், தமிழில் 'கம்பீரம்', 'முத்திரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சண்டிகரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண்பதற்காக, ராக்கி சாவந்த் சென்றிருந்தார். அந்த போட்டியில், எல்லோரையும் வென்ற 'ரொபல்' என்ற வீராங்கனை பார்வையாளர்களை நோக்கி, துணிச்சல் உள்ளவர்கள் தன்னுடன் மோதலாம் என சவால் விட்டார். 

இதையடுத்து, வீராங்கனையின் சவாலை ஏற்ற நடிகை ராக்கி சாவந்த், வளையத்துக்குள் குதித்தார். பின்னர் இருவரும் மோதியபோது, சில நொடிகளிலேயே ராக்கி சாவந்தை, ரொபல் தனது தலைக்கு மேலே தூக்கி வேகமாக தரையில் அடித்தார். இதில் ராக்கி சாவந்த் மயக்கமானார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பதறியபடி ராக்கி சாவந்துக்கு முதல் உதவி அளித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராக்கி சாவந்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்