டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரிப்பு

தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரிப்பு
x
தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன புகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இதையடுத்து, காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், வீடுகளில் ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை. இதனால் இன்று டெல்லியின் பந்தா பகுதியில் முகக்கவசம் அணிந்தபடி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் நிலைக்கு, புகை மூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்