சத்தீஷ்கர் தேர்தல் : 70 % வாக்குகள் பதிவு

சத்தீஷ்கரில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
சத்தீஷ்கர் தேர்தல் : 70 % வாக்குகள் பதிவு
x
சத்தீஷ்கரில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. காலையில் வாக்குப்பதிவு துவங்கியதும் மக்கள், ஆர்வமாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால், சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. நக்சலைட்டுகளின் தாக்குதல் மற்றும் மிரட்டல்களை மீறி, வாக்காளர்கள், வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதனிடையே, சத்தீஷ்கரில், 72 தொகுதிகளுக்கு 2 - வது கட்ட வாக்குப்பதிவு, வருகிற 20 ம் தேதி நடைபெறும்.

Next Story

மேலும் செய்திகள்