"பாஜக-வுடன் போட்டியிட எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை" - பிரதமர் மோடி
பா.ஜ.க,வுடன் எப்படி போட்டி போடுவது என எதிர்க்கட்சிகளுக்கு இன்னும் தெரியவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு, நவம்பர் 20ம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அங்குள்ள பிலாஸ்பூர் மற்றும் பஸ்டர் பகுதிகளில், நடைபெற்ற பாஜக பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பாஜக தொண்டர்களின் ஓயாத உழைப்பு தொடரும் வரை, பாஜகவின் ஆட்சி தொடரும் என்று அப்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார். பா.ஜ.க.வை எப்படி எதிர்ப்பது என எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை என்று கூறிய மோடி, ஊழல் வழக்கில் ஜாமினில் இருக்கும் தாய் - மகன் உள்ளிட்ட சிலர் பாஜகவை கேள்வி கேட்பதாக விமர்சித்தார்.
Next Story