மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வெங்கட்ராவ் ரூ50 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது அம்பலம் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

ஆந்திராவை சேர்ந்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வெங்கட்ராவ் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்துள்ளது.
மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வெங்கட்ராவ் ரூ50 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது அம்பலம் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
x
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வெங்கட்ராவ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,  வெங்கட்ராவின் ஓட்டுநர் மோகன் ராவிடம்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வெங்கட்ராவ் உறவினர் சீனிவாச ராவ் என்பவர் வீட்டிற்கு இரண்டு பெட்டிகளை கொடுத்து அனுப்பி வைத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சீனிவாச ராவ் வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2  பெட்டிகளை  கைப்பற்றினர். அதில் 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டே கால் கிலோ  தங்க நகை மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஓட்டுநர்  மோகன் ராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்