சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் - முதல்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் - முதல்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு
x
ராஜ்நந்தகான் பகுதிக்கு உட்பட்ட மிடாபார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 3 மணி வரை அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது.  மேலும், ராஜ்நந்தகான் பகுதிக்கு உட்பட்ட 5 தொகுதிகள் மற்றும் பாஸ்டர் பகுதிக்கு உட்பட்ட 3 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 5 மணி வரை நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடைபெறும் பகுதியில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேத்கல்யாண் பகுதியில் உள்ள துமாகல் வாக்குச்சாவடி மையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்