"உர்ஜித் படேலுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு" - ப.சிதம்பரம்

ராமர் கோவில் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்தால் அது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக அமையும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உர்ஜித் படேலுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு - ப.சிதம்பரம்
x
* டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதுவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதே என்றும் தெரிவித்தார்.

* ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் சிங் படேலை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதாக சிதம்பரம் அப்போது குற்றம் சாட்டினார். 

* அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற மத்திய அரசின் திட்டம் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட திட்டமே எனவும் அதனை பாஜக அரசு பெயர் மாற்றி ஜன்தன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

* ரூபாய் நோட்டு நடவடிக்கையின் போது  ஜன்தன் வங்கி கணக்குகளில் 42 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திடீரென எப்படி வந்தது என்றே தெரியவில்லை எனவும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்