‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ உண்மையா..? இல்லையா..?

"Statue of Unity" என்ற வாசகத்திற்கு ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்தது உண்மையா..? இல்லையா..?
‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ உண்மையா..? இல்லையா..?
x
குஜராத் மாநிலம் நர்மதா நதியின் கரையோரத்தில், சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் வல்லபாய் படேலின் 597 அடி உயரமான சிலை சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உலகில் உள்ள சிலைகளில் இதுவே மிகப்பெரிய சிலை ஆகும்.



உலகிலேயே மிகவும் உயரமான இந்த சிலைக்கு ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை காண வருவோருக்கு ஏதுவாக "Statue of Unity" என்ற ஆங்கில வாசகத்தை மொழி பெயர்த்து பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் ஐந்து, வெளிநாட்டு மொழிகள் ஐந்து என பத்து மொழிகளில் "Statue of Unity" என்ற வார்த்தை மொழிபெயர்த்து எழுதப்பட்டுள்ளது. அதில், தென்னிந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. 



சர்தார் வல்லபாய் படேல் மாபெரும் சிலையில் இடம்பெற்றுள்ள "ஸ்டாச்சு ஆஃப் யூனிட்டி" பதாகையில் தமிழில் செய்யப்பட்ட தவறான மொழிப்பெயர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. "Statue of Unity" என்ற வாசகத்தை தமிழில், மொழிப்பெயர்த்து எழுதாமல் ஒலி பெயர்த்து எழுதியுள்ளனர். அதுவும் தவறாக ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என்று எழுதியுள்ளனர். இந்த தவறான மொழிப்பெயர்ப்பு மக்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாற்றப்பட வேண்டும் என ஒரு பக்கம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மறுபக்கம், இதை கிண்டலடித்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



ஆனால், இன்று அப்படி ஒரு பலகையே அங்கே வைக்கப்படவில்லை என்றும், தமிழ் தவறாக மொழிப்பெயர்க்கப்படவில்லை என்றும் மறுத்து பாஜக-வினர் சமூக ஊடகங்களில் இது வெறும் போட்டாஷாப் வேலை என்று பதிவு செய்து வருகின்றனர். சில குஜராத் அதிகாரிகளும் அப்படி ஒரு பலகை இல்லை என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. தற்போது படேல் சிலை திறப்பு தொடர்பாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதே புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



ட்விட் நீக்கம் :

பின்னர், சிறிது நேரத்தில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து இந்த ட்விட் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்