ரிசர்வ் வங்கி சட்டத்தின் ஏழாவது பிரிவை அமல்படுத்த மத்திய அரசு கடிதம்

ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையேயான மோதல் அதிகரித்துள்ள நிலையில், முதல் முறையாக ரிசர்வ் வங்கி சட்டத்தின் ஏழாவது பிரிவை அமல்படுத்த மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
ரிசர்வ் வங்கி சட்டத்தின் ஏழாவது பிரிவை அமல்படுத்த மத்திய அரசு கடிதம்
x
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஓன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். ரிசர்வ் வங்கிக்கு அதிக உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார். இது ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதலை வெளிச்சம் போட்டு காட்டியது. 2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரிசர்வ் வங்கி கடன்களை வாரி வழங்கியதால், பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டதாகவும், அதனை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிதிதுறை அமைச்சர் அருண் ஜெட்லியும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ரிசர்வ் வங்கி சட்டத்தின் ஏழாவது பிரிவை அமல்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடலாம் என இந்த சட்டப்பிரிவு சொல்வதால், சட்டம் அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ரிசர்வ் வங்கி செயல்படும். சுதந்திர இந்தியாவில் இதுவரை, இந்த சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்