சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட உருவச்சிலை - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற உள்ள, சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட உருவச்சிலை - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
x
குஜராத் மாநிலம், கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில், இந்த 597 அடி உயர சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 990 கோடி ரூபாய் செலவில், 2 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் இந்த பிரம்மாண்ட சிலையை கட்டியுள்ளனர். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் படேலுக்கு தங்க நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ஒற்றுமைக்கான சிலை என பெயரிடப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று , உலகிலேயே மிக உயரமான அவரது சிலையை, பிரதமர் நரேந்திர மோடி 
திறந்து வைக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்