தூய்மை பணிக்காக திரண்ட 'அஷ்ரப்'கள் : வியக்க வைத்த விநோத முயற்சி

கேரளாவில் அஷ்ரஃப் என்ற பெயரை தாங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கோழிக்கோடு கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
தூய்மை பணிக்காக திரண்ட அஷ்ரப்கள் : வியக்க வைத்த விநோத முயற்சி
x
கேரளாவில் அஷ்ரஃப் என்ற பெயரை தாங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், கோழிக்கோடு கடற்கரையில், தூய்மை பணியில் ஈடுபட்டனர். இவர்களின் பெயர்களில் 'அஷ்ரஃப்' என்ற வார்த்தை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் எனக்கூறி, இதற்காக முன்பதிவு நடைபெற்றது. 'அஸ்ரஃப் சங்கமம் 2018' என்ற பெயரில், பதிவு செய்தவர்களைக் காட்டிலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும், சமூக நலப் பணிகளைச் செய்யவுள்ளதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களையும் உருவாக்கியுள்ள இவர்கள், தொடர்ந்து சேவைப்பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். 

முதியோர் நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தர உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அஷ்ரஃப் என்றால், அரபி மொழியில், மிகவும் மதிக்கத்தக்க ஒருவர் என்று பொருள். 

Next Story

மேலும் செய்திகள்