"அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைக்கிறது" - பிரதமர் மோடி

விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைக்கிறது - பிரதமர் மோடி
x
"மன் கி பாத்" எனும்  நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒற்றுமைக்கான சின்னத்தை குறிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு, உலகின் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தச் சிலையை வரும் 31ம் தேதி திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதையொட்டி, அன்று நடக்கும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். 

சமூகத்தில் வசிக்கும் நாம் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும் என்றும், சமூக பணிகளில் மக்கள் ஆர்வமாக பங்கேற்பது பலருக்கும் முன்மாதிரி என்றும் மோடி குறிப்பிட்டார். இயற்கையை காப்பது நமது கடமை என்றும், இந்த விஷயத்தில் அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் குடும்பத்திற்கு தலைவணங்குவதாகவும் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்