கோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் தடை : பண்ணையாளர்கள் அதிர்ச்சி

பண்ணைகளில் கோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் தடை : பண்ணையாளர்கள் அதிர்ச்சி
x
தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கோழிப்பண்ணைகளில் முட்டை கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் இடைக்கால  விதித்துள்ளது.  இந்த தீர்ப்பால் கோழிப் பண்ணையாளர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது  குறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சின்ராஜ் கூறும்போது, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இனி வரும் காலங்களில் இந்திய அளவில் புதியதாக கோழிப்பண்ணை அமைக்க முடியாது என்றார். இதே நிலை தொடர்ந்தால், ஒரு முட்டை 50 ரூபாய்க்கு மேல் விற்க வேண்டிய சூழலும் ஏற்படலாம் என்று கூறுகிறார். எனவே பழைய முறையை பின்பற்றி கோழிகள் வளர்க்க அனுமதிக்க கோரி மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்