பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் நடை திறப்பு

பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் நடை திறப்பு
x
பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விரதம் இருந்து இரு முடி கட்டிய ஐயப்ப பக்தர்கள், கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வரும் 22ஆம் தேதி வரை கோயில் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயில் : 2வது நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 

ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் வருகையால் இரண்டாவது நாளான
இன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி பூஜைக்காக மேல்சாந்தியாக பெங்களூருவை சேர்ந்த வி.என்.வாசுதேவன் நம்பூதரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு : போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி 

இதனிடையே, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சபரிமலையை சுற்றிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. நிலக்கல் பகுதியில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். வனப்பகுதிக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை போலீசார் விடாமல் விரட்டியடித்தனர். 

சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு : தொலைக்காட்சி பெண் செய்தியாளரின் கார் மீது தாக்குதல்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பெண் செய்தியாளர் பூஜா பிரசன்னாவின் கார் தாக்கப்பட்டது.  பத்தனம்திட்டாவில் ஒரு கும்பல் அவரது காரை வழி மறித்து தாக்கியது.

பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு : வாகனங்களை அடித்து நொறுக்கிய போலீஸார்

சபரிமலை கோயிலைச் சுற்றி பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 22-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையை சுற்றிலும் 30 கி.மீ. பகுதியில் போராட்டம் நடத்தவும் போலீசார் தடை விதித்துள்ளனர். முன்னதாக, பம்பையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்திக் கலைத்த போலீஸார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், ஆட்டோ, மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு நிலவியது.

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று பல பெண்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில், பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்