தசரா விழா : ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அமைச்சர் தவறி விழுந்தார்

மைசூரு-வில் இன்று காலை நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தை, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர் ஜி.டி. தேவகவுடா தொடங்கி வைத்தார்.
தசரா விழா : ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அமைச்சர் தவறி விழுந்தார்
x
கர்நாடக மாநிலம் மைசூரு-வில் தசரா விழா கடந்த 9ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு 
விதமான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தை, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 
அமைச்சர் ஜி.டி. தேவகவுடா, தொடங்கி வைத்தார். அப்போது, போட்டியில் பங்கேற்றவர்களுடன் சேர்ந்து அவரும் ஓடினார். ஆனால், சில நிமிடங்களிலேயே நிலை தடுமாறிய அவர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்